தமிழகத்திற்கு இவ்வளவு கோரிக்கைகள் இருக்கிறது!! மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைக்கும் ஸ்டாலின்;
நேற்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்தார். அவரோடு பல்வேறு விதமான கோரிக்கைகளையும் தீர்மானங்களையும் எடுத்துரைத்தார்.
அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேனி நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல எதிர்ப்பு திட்டங்களை அவரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் நாடாளுமன்றத்தை பார்வையிட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் மற்றும் அமிர்ஷா உள்ளிட்டோரை சந்தித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் இன்றைய தினம் அவர் டெல்லி மாநில முதல்வரை நேரில் சந்தித்து அவரோடு சேர்த்து டெல்லி பள்ளிகளை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியானது. இவ்வாறு உள்ள நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயலை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் 2 பேரிடமும் எடுத்துரைக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
