தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. அதுவும் குறிப்பாக நடப்பு கல்வி ஆண்டில் இறுதி செமஸ்டர் தவிர மீதமுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது.
இதன் விளைவாக இன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தாமதமாக பதிவேற்றப்பட்டது ஆப்சன்ட் போட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் இனி ஆன்லைன் தேர்வு கிடையாது என்று தமிழகத்தின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்று பொன்முடி விளக்கமளித்தார். ஆன்லைன் தேர்வுகளால் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத் தாள்களுக்கு ஆப்ஷன்ட் போட்டிருந்தால் தவறு என்று அமைச்சர் பொன்முடி கூறினார். தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்கள் திருத்தும் செய்யப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியளித்தார்.
பத்தாயிரம் பேருக்கு ஆப்சன்ட் போடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் பொன்முடி இவ்வாறு தகவல் அளித்துள்ளார். 10,000 மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்பட்டு என பரப்பப்படும் தகவல் அனைத்தும் தவறானது என்றும் பொன்முடி கூறினார். தாலிக்கு தங்கம் திட்டத்தில் மாணவிகளுக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் பயன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகம் என்றும் பொன்முடி கூறினார்.