நம் தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தான் அனைத்து பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் திடீரென்று இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் வெளியாகி மாணவர்கள் மத்தியில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் பரவி வருகின்ற மிகக் வீரியமிக்க கொரோனாவான ஒமைக்ரான் பரவல் இந்தியாவிலும் பரவத் தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மீண்டும் காலவரையற்ற பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் வந்தாலும் அதனை கட்டுப்படுத்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.
அதோடு இந்த ஒமைக்ரான் கொரோனாவால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் முற்றிலும் தவறானது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்