சோகத்திலும் சந்தோசமான செய்தி; இன்று 31 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை!

சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்படுத்தப்பட கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. குறிப்பாக நம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவினால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 9 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 705 பேர் கொரோனாவினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உள்ள நிலையிலும் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் கொரோனா வினால் உயிரிழப்பு இன்று நிகழவில்லை என்பது மகிழ்ச்சியான தகவல் ஆகவே காணப்படுகிறது.

அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை. திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை.

அதே சமயத்தில் நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கொரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை. சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் கொரோனாவினால் உயிரிழப்பு நிகழவில்லை.

திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று உயிரிழப்பு நிகழவில்லை. கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை சற்று குறைவாக காணப்படுவது பொதுமக்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment