குஷியில் மக்கள்! தமிழ்நாட்டில் இன்று 31 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பே இல்லை!!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 715 பேருக்கு கொரோனா பாதிப்பு புதிதாக தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனா

 

இருப்பினும் தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் உயிரிழப்பு ஒன்று இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல்,கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை.கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கொரோனாவால் உயிரிழப்பு இன்று நிகழவில்லை.

நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் உயிரிழப்பு இன்று நிகழவில்லை.தென்காசி, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்றைய தினம் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment