எந்த தடையும் கிடையாது! தேர்தல் வெற்றியை சந்தோசமாக கொண்டாடலாம்!!
சில வருடங்களாகவே நம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டு விதிகள் நடைபெற்றுள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் நடைமுறையில் இருந்தது.
அதன்படி சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கடந்த மாதம் தொடங்கிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் கட்டுப்பாட்டு விதிகளோடு வாக்களித்தனர்.
இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சில தடைகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவின் பரவலால் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் போது வெற்றி கொண்டாட்டங்களுக்கு விதித்த தடையை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது தொண்டர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
