பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி முடித்துள்ள ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஒரு சில ஓடிடி நிறுவனங்கள் அணுகியதாகவும் ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகிய இருவரும் கண்டிப்பாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி இந்த படம் தியேட்டரில் தான் முதலில் வரும் என்றும் அதன் பின்னர் தான் ஓடிடி மற்றும் சாட்டிலைட் டிவியில் வரும் என்றும் கூறியதாக தெரிகிறது ஐசரி கணேசனின் உறவினர் வருண் தான் இந்த படத்தின் நாயகன் என்பதால் இந்த படத்தை கண்டிப்பாக ஹிட்டாக்க வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது