Connect with us

ஆகஸ்ட் 1முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

Entertainment

ஆகஸ்ட் 1முதல் திரையரங்குகள் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

d7b064f492729856c2915d3375033f91

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் இந்த ஆறாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த கடைகள், தொழில் நிலையங்கள் உள்பட அனைத்தும் தற்போது இயங்கஅனுமதிக்கப்பட்டு வருகின்றன

ஆனால் திரையரங்குகளில் மட்டும் திறக்கப்பட இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் திரையரங்குகள் திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் திரையரங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் தாங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டால், விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரை போற்று’, நயன் தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ உள்பட பல ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ஒரு சீட் இடைவெளி விட வேண்டும், திரையரங்க கேண்டீன் மூடப்பட வேண்டும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும், உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறத

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top