Entertainment
‘மாஸ்டர்’ பிரச்சனையால் புது நிபந்தனை விதித்த திரையரங்கு உரிமையாளர்கள்!
தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆனதையடுத்து புதிய படங்களுக்கு புது நிபந்தனை ஒன்றை திரையரங்கு உரிமையாளர்கள் விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த 13ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்னும் சொல்லப்போனால் திரையரங்குகளுக்கு கொரோனா பாதிப்பிற்கு பின்னர் மீண்டும் மக்கள் வரத் தொடங்கியது இந்த படத்தால் தான் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் இந்த படம் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியானது. இதனால் திரையரங்குகளில் கூட்டம் வெகுவாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிரச்சனை காரணமாக திரைப்படம் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியானதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் புதிய நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளனர்
இனிமேல் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து தான் ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளும் படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகும் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு எத்தனை தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஒப்புக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
