ஜெய்பீம் ரிலீஸ்: சூர்யாவுக்கு கடும் கண்டனம்!

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியானதை அடுத்து இந்த படத்தை ஹோட்டல் ஒன்றில் திரையிட முயற்சி செய்ததை கண்டித்து திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யாவுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்

ஜெய்பீம் இன்று ரிலீஸ் ஆனதை அடுத்து அந்த திரைப்படத்திற்கு பாசிட்டிவி விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் சூர்யா தொடர்ச்சியாக தனது திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட அனுமதி அளிப்பதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஹோட்டல் ஒன்றில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஜெய் பீம் படத்தை ஓட்டல் ஒன்றில் சூர்யா ரசிகர்கள் வெளியிட முயற்சித்து வந்ததாக கூறப்பட்டது

ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் பொதுவெளியில் வெளியிட அனுமதி இல்லை என்று தெரிந்தும் சூர்யா ரசிகர்கள் இதனை செய்யும்போது சூர்யா தனது ரசிகர்களை கண்டிக்காமல் இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரசிகர்களை அவர் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment