கேரளாவில் உள்ள இளைஞரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூபாய் 2.44 கோடி டெபாசிட் செய்யப்பட்ட நிலையில் அந்தப் பணத்தை அவர் ஒரே நாளில் காலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட போதிலும் சில சமயம் தவறுதலாக வேறொரு கணக்கிற்கு பணம் டெபாசிட் செய்யப்படும் தவறு சில நேரங்களில் நடந்து விடுகிறது.
அந்த வகையில் கேரளாவை சேர்ந்த நிதின் என்ற இளைஞரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூபாய் 2.44 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வந்ததை பார்த்ததும் அவசர அவசரமாக நிதின் தனது கடனை முழுவதையும் அடைத்துவிட்டு சில ஐபோன்கள் வாங்கியுள்ளார். இதனால் ஒரே நாளில் அந்த பணம் முழுவதையும் காலி செய்து உள்ளார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வங்கி தவறுதலாக நிதின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியதை கண்டறிந்து உடனடியாக நிதினிடம் தொடர்புகொண்டபோது அவர் ஒரே நாளில் முழு பணத்தையும் செலவு செய்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நிதினை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.