Connect with us

ஜிம்மில் முரட்டு பயிற்சி: மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த மதுரை இளைஞர்!!

workout

Tamil Nadu

ஜிம்மில் முரட்டு பயிற்சி: மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த மதுரை இளைஞர்!!

பொதுவாக நாம் அனைவருக்கும் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆர்வமாக காணப்படும். அதுவும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உடற்பயிற்சி கூடங்களில் சென்று உடம்பை வலுப்பெற கடினமாக பயிற்சி மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

இதன்மூலம் அவர்கள் தங்களது உடம்பை உருமாற்றிக் கொண்டு ரசிக்கும் அளவிற்கு உடற்பயிற்சி செய்வர். இது பல நேரங்களில் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் பல நேரங்களில் அளவுக்கு அதிகமாக எடை தூக்குவதால் பக்கவிளைவுகள் ஏற்படும். அதுவும் குறிப்பாக ஜிம்முக்கு சென்ற ஓரிரு நாட்களிலேயே அதிக அளவு வலுவைத் கூடாது என்று உடற்பயிற்சி ஆலோசகரும் ஆலோசனை அளிப்பார்.

இந்த நிலையில் தற்போது உடற்பயிற்சி கூடத்தில் அதிக பளு தூக்கி அவர் உயிரிழந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.

இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது. அதன்படி மதுரை மாநகரம் பழங்காநத்தம் பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையை தூக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top