லிப்ட் கேட்டு வந்த இளைஞர் செய்த வேலை; ஆறு சவரன் நகை பறிப்பு!!

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது தமிழகத்தில் 42,000 மேல் சவரனின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு நகை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வாறு உள்ள நிலையில் இந்த நகைகளை கொள்ளையடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சிறுக சிறுக சேமித்து தங்க நகை எடுத்தால் அதனை சுதந்திரமாக வெளியே அணிந்து கொள்ள முடியாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக காணப்படுகிறது.

ஏனென்றால் எந்த வகையில் திருடர்கள் வழிப்பறிகள் கொள்ளையடிப்பார்கள் என்பது கணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வண்டியில் லிப்ட் கேட்பது போல் நடித்து நகையை பரித்துள்ள சம்பவம் சென்னையில் நடைபெற்று உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் லிப்ட் கேட்பது போல் நடித்து கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளரிடம் இருந்து சுமார் 6 சவரன் நகையை பறித்துள்ளார் கொள்ளையர். முகப்பேரை சேர்ந்த கூட்டுறவு வங்கி  மேற்பார்வையாளர் ராஜா விருகம்பாக்கத்தில் நண்பரை சந்தித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.

கோயம்பேடு மார்க்கெட் அருகே வந்தபோது 20 வயது இளைஞர் ஒருவர் லிப்ட் கேட்டு ஏறிய நிலையில் நகையைப் பறித்து ஓடியதாக தெரிகிறது. ராஜா கழுத்தில் இருந்த ஆறு சவர நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்து விட்டு அந்த இளைஞர் ஓடியுள்ளார்.

கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளரிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து கைவரிசை காட்டிய இளைஞருக்கு போலீசார் வலை வீசி தேடி கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.