பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர்…. வலுக்கும் எதிர்ப்பு….!

பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என பழமொழி கூறுவார்கள். ஆனால் இளைஞர் ஒருவர் பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான ஒரு இடம். மனிதர்கள் வாழும் இடங்களுக்கு விலங்குகள் வரக்கூடாது என கூறும் நாம் மட்டும் விலங்குகள் வாழும் காடுகளுக்கு சென்று லூட்டி அடித்து வருகிறோம். ஒருவேளை ஏதேனும் ஒரு விலங்கு தப்பி தவறி வழி தெரியாமல் ஊருக்குள் நுழைந்து விட்டால் அவ்வளவு தான்.

இப்படி விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான மோதல் பல நடந்துள்ளது. மனிதர்கள் விலங்குகளை கொடூரமாக தாக்கும் வீடியோக்கள் மற்றும் செய்திகளை நாம் பலமுறை படித்திருப்போம் பார்த்திருப்போம். தற்போதும் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

அதன்படி மாகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமப்பகுதி ஒன்றில் இளைஞர் ஒருவர் சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றை வைத்து ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட பலர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

மேலும் இளைஞரின் இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருவதோடு, வாயில்லா ஜீவனை வைத்து விளையாடியதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். இருப்பினும் அந்த பாம்பு ஏற்கனவே இறந்த பாம்பா அல்லது அந்த இளைஞர் அதை கொன்று ஸ்கிப்பிங் விளையாடினாரா என்பது தெரியவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment