ஒரு ஒரு ரூபாயாக 2,00,000 ரூபாய் உண்டியல் காசு.. கனவு பைக்கை வாங்கிய இளைஞன்!

பைக் வாங்கி அதில் மாஸாக செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்க இளைஞனின் கனவாக இருக்கும்.

அந்தவகையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சேமித்து வைத்து அந்தப் பணத்தில் ஒரு இளைஞன் பைக் வாங்கியுள்ள சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றது.

சேலத்தைச் சார்ந்தவர் 29 வயது நிறைந்த பூபதி என்ற இளைஞன். இவர் தன்னுடைய சிறு வயதில் இருந்தே உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தினைக் கொண்டு இருந்துள்ளார் பூபதி.

5 ஆம் வகுப்பு படிக்கும்போது தன்னுடைய காசில் எப்படியாவது பைக் வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வெறித்தனமாக பணம் சேமித்து வைத்த அவர் தற்போது ரூ.2,00,000 சேமித்துள்ளார்.

2,00,000 ரூபாயும் ஒரு ஒரு ரூபாய் நாணயங்களாக உள்ளது. இதனை தன் நண்பர்களின் உதவியுடன் எண்ணியதோடு, மொத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு பைக் ஷோரூம் வந்துள்ளார்.

ஒரு ரூபாய் நாணயங்களாக 2,00,000 ரூபாயா? என்று ஷோரூம் ஊழியர்கள் திகைத்துப் பார்த்துள்ளனர்.

அதன்பின்னர் பூபதி தன்னிடம் இருந்த பணத்தில் பைக் வாங்கியுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.