ஆடி காலம் என்றாலே காற்று காலமாக அமையும். ஏனென்றால் ஆடி மாதத்தில் காற்று தீவிரமாக வீசும். இந்த ஆடி மாதத்தில் பெரும்பாலான இளைஞர்கள் பட்டம் விட்டு மகிழ்வர். குறிப்பாக சென்னை பகுதிகளில் வானத்தில் பட்டத்தை விட்டு விளையாடுவார்கள்.
பல பட்டங்கள் உயரப் பறக்கும். இந்நிலையில் பட்டதோடு சேர்த்து ஒரு வாலிபர் பறந்தது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த சம்பவம் இலங்கை நாட்டில் அரங்கேறியது.
அதன்படி இலங்கை நாட்டில் யாழ்ப்பாணப் பகுதியில் இளைஞர் ஒருவர் பட்டம் விட்டுக் கொண்டிருந்தார். காற்றின் வேகம் மற்றும் கட்டுப்படுத்த முடியாமை காரணமாக பட்டதோடு சேர்த்து இளைஞரும் பல அடி தூரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.
அவரது நண்பர்கள் கீழே இருந்து கொண்டு கயிற்றை விடுமாறு கத்திக் கொண்டிருந்தனர். செய்வதறியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒரு சமயத்தில் கயிற்றை விட்டார். அதோடு அவர் உயிர் தப்பினார்.
ஏனென்றால் அவர் சில அடி தூரம் இறங்கிய பின்னர் கயிற்றை விட்டார். அவரும் குதித்த இடம் மணல் பகுதி என்பதால் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.