ரூட்டை மாற்றிய இளம் நடிகர்…. இனி அந்த மாதிரி படங்கள் வேண்டாம்….!

திரையுலகில் வெற்றி என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் சில நடிகர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றி கிடைத்து விடுகிறது. அதாவது அவர்களின் முதல் படமே நல்ல வெற்றி பெற்று விடுவதால் அவர்களுக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அவர்களின் கைகளில் தான் உள்ளது.

தரமணி

அந்த வகையில் தனக்கு கிடைத்து வெற்றியை கெட்டியாக பிடித்து கொண்டுள்ளார் நடிகர் வசந்த் ரவி. தேசிய விருது இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் வசந்த் ரவி. அப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. படமும் நல்ல வெற்றியை பெற்றது.

 வசந்த் ரவி

இருப்பினும் அந்த படத்திற்கு பின்னர் வாய்ப்புகள் குவிந்தாலும் வசந்த் மிகவும் நிதானமாகவே படங்களை தேர்வு செய்துள்ளார். அதனால் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னரே ராக்கி படத்தில் ஒப்பந்தமானார். இப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெற்றி படங்களாக வழங்கியுள்ளதால் வசந்த் அடுத்த படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறாராம். மேலும் தரமணி மற்றும் ராக்கி ஆகிய இரண்டு படங்களுமே டார்க் படங்கள் அதாவது மிகவும் சீரியஸான படங்கள் என்பதால் மீண்டும் இதேபோன்ற படங்களில் நடிக்க தயக்கம் காட்டி வருகிறாராம்.

தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடித்தால் எங்கே தன்னை இப்படியே முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்த வசந்த் தற்போது தனது ரூட்டை மாற்றி அடுத்ததாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த புதிய படத்தை கண்டநாள் முதல் மற்றும் கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கிய பிரியா இயக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment