உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் : வருகின்ற 30-ந் தேதி திறப்பு !!!
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது சீனப் பெருஞ்சுவர். இந்த அதிசயத்தை பார்க்கவே அந்நாட்டிற்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் சீனாவிற்கு படை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக சீனாவில் வூனான் மாகாணத்தில் உள்ள Zhangjiajie- வில் 410 அடி புள்ளி 1 அடி நீளமுள்ள கண்ணாடி பாலம் தான் தற்போது வரையில் உலகில் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனையை படைத்துள்ளதால் இப்பாலத்தை பார்க்கவும் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்த நிலையில் இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக வியட்நாமில் உள்ள உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் வருகின்ற ஏப்ரம் 30- ஆம் தேதி மறு ஒருங்கிணைப்பு தினத்தில் திறக்கப் படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே Bach Long என அழைக்கப்படும் இந்த கண்ணாடி பாலமானது 2 ஆயிரத்து 73 புள்ளி 5 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனைக்காக இந்த பாலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
