ஒமைக்ரானின் எதிரொலி: அபாய கட்டத்தை எட்டியது- உலக சுகாதார அமைப்பு;

இந்த உலகம் 2019 ஆம் ஆண்டு முதலே கொரோனா பிடியில் மாட்டிக் கொண்டது. கொரோனா நாளுக்கு நாள் அதிக வீரியத்துடன் பரவிக்கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆல்ஃபா, டெல்டா என்று புதிய உருமாற்றத்தோடு அதிதீவிரமாக பரவி வருகிறது.

ஒமைக்கிரான்

இந்த நிலையில் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் தோன்றி இன்று உலகில் உள்ள பல நாடுகளில் வேகமாக பரவி கொண்டு வருகிறது ஒமைக்ரான் வைரஸ். இவை டெல்டா வகைகளைவிட அதிக வீரியத்துடன் இருக்கும் என்றும் பலரும் எச்சரித்திருந்தனர்.

இந்தநிலையில் ஒமைக்ரான் அபாய கட்டத்தில் எட்டியுள்ளதாக உலக சுகாதார துறை அமைப்பு கூறியுள்ளது. ஏனென்றால் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த ஒமைக்ரான் நோயின் பரவல் அதிதீவிரமாக காணப்படுகிறது. இன்னும் சில நாட்களிலேயே புத்தாண்டு வர உள்ள நிலையில் உலக நாடுகள் பலவும் மும்மரமாக செயல்பட்டு வருவதால் இந்த ஒமைக்ரானின் பாதிப்பு அதிகமாக பரவும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவும் வேகம் அபாய கட்டத்தை எட்டி உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது பலருக்கும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment