கடலுக்கு அடியில் தேடலை தொடங்கிய தமிழக அரசு… சோனார் ஸ்கேனருடன் களமிறங்கிய தொல்லியல்துறை!

கடலில் புதைந்துள்ள பழங்கால பொருட்களை கண்டறியும் பணி தூத்துக்குடியில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாண்டிய மன்னர் காலத்தில் வணிகத்திற்கு பயன்படுத்திய கொற்கை என அழைக்கப்பட்ட துறைமுகம் அழிந்துவிட்டதால் அதனை கண்டுபிடிக்கும் பணிகள் மற்றும் கடலில் புதைந்துள்ள பழங்கால பொருட்களை கண்டறிதல் ஆகியவைகளை சோனார் ஸ்கேனர் மூலம் தொல்லியல்துறை மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து கடல்சார் முன்கள ஆய்வு தொடக்க விழா தூத்துக்குடி வ உசி துறைமுகத்தில் நடைபெற்றது.

இந்த பணியின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துறைமுக பொறுப்பு கழகத் தலைவர் ராமசந்திரன், கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த தேடுதல் பனியானது தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர்- வரை 12 கடல்மைல் தூரம் நடைபெறுகிறது. இந்த தேடுதல் பணிக்காக தொல்லியல்துறைக்கு சொந்தமான சாகர் தாரா கப்பல் மூலம் 7-நாட்கள் தேடுதல் பணிகள் நடைபெற உள்ளது.

கடலில் 14-மீட்டர் ஆழத்தில் அப்போது பயன்படுத்திய கப்பலில் சேதமடைந்த பொருள்கள் வணிகத்துக்கு பயன்படுத்திய பொருள்களை கடலில் தேடும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment