
தமிழகம்
இமயமலையில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் திருப்பூரில் பூத்த அதிசயம்!!!
பிரம்மகமலம் அல்லது நிஷாகந்தி என்ற மலர் வருடத்திற்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்க கூடிய அரிய வகை மலர் ஆகும். கள்ளி இனத்தை சேர்ந்த வெண்ணிறம் கொண்ட இந்த மலரானது 3 இதழ்களை கொண்டுள்ளது ஆகும்.
இந்த செடிகள் பொதுவாக மலைப்பாங்கான இடங்கள் மற்றும் பாறைகளுக்கு இடையே வளரும் தன்மை கொண்டவையாக உள்ளது. இமயமலையின் உயரம் குறைந்த பகுதிகளில் பிரம்மகமலம் மலர்கள் அதிகமாக காணப்படுகின்றன.
பகல் பொழுதில் மொட்டாக காணப்படும் இந்த மலர்கள் இரவு நேரங்களில் சில மணி நேரமே மலர்ந்து காணப்படுவது இதன் பண்பாக திகழ்கிறது. இந்நிலையில் அரியவகை மலரானது திருப்பூரில் பூத்திருப்பதை கண்டு பலரும் அதிசயத்துடம் பார்த்து செல்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் அடுத்த கங்கா நகரில் வசித்து வரும் அஸ்வின் என்பவரது வீட்டில் அரியவகை மலரானது நேற்று முன்தினம் இரவு மலர்ந்ததாக கூறப்படுகிறது.
ஜூலை மாதத்தில் இரவில் மலரும் இந்த பூவானது 3 விதமான இதழ்களைக் கொண்டு வெண்மையான நிறத்தில் மலர்ந்து இருப்பதை காண அப்பகுதியில் இருக்கும் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
