வெறும் கையால் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் இருந்து வடையினை எடுக்கும் அதிசய மனிதர்!

கடைக்காரர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடையைச் சுட்டு எடுக்கும் விஷயம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

விருது நகர் மாவட்டம் காந்திநகரைச் சார்ந்தவர்தான் முத்துசாமி, இவர் காந்திநகரில் டீக்கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இந்தக் கடையின் பெயர் முத்து டீக் கடை மற்றும் ஸ்நாக்ஸ் கார்னர்.

டீக்கடையில் வடை, போண்டா போடுதல் போன்ற வேலையினை செய்து வருகிறார்.

அவர் கடந்த 18 ஆண்டுகளாக இந்த வேலையினைச் செய்துவரும் நிலையில் அவர் கரண்டியை பெரிதாகப் பயன்படுத்தாமல் வடையினை எண்ணெய்ச் சட்டியில் இருந்து கைகளாலேயே எடுத்து வருகிறார்.

கடைக்கு வடை, போண்டா வாங்க வருவோர் இதனை அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர். அதுபோக அடுப்பில் எரிந்து கொண்டு இருக்கும் நெருப்பினை கைகளாலேயே எடுக்கிறார்.

முத்துசாமி வடை போடுவது மட்டுமின்றி வார இறுதி நாட்களில் கோழி இறைச்சிக் கடை ஒன்றினை நடத்தி வருகிறார்.

முத்துசாமி கைகளால் வடையினை கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் இருந்து எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்திலும் வெளியாக பார்வையாளர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...