வரம்பு மீறிய உறவால் கர்ப்பம்! திருமணத்திற்கு வற்புறுத்திய பெண் படுகொலை..!!

தஞ்சாவூர் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை கொலை செய்த நபர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகழத்தூர் அருகே வாத்தியனேத்தல் கிராமத்தை சேர்ந்தவர் வாசுசி. இவரும் அதே பகுதியில் வசித்து வரும் மாதவன் என்பவரும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ரெடியா இருங்க! நாளை 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!!

இதில் வாசுகி கர்ப்பமானதால் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் வாசுகியை சமாதானம் செய்வதுபோல் அழைத்த மாதவன் அவரது சகோதரர் உதவியுடன் குளத்தில் மூழ்கடித்து வாசுகியை கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தகவல் அறிந்த வாசுகியின் பெற்றோர் காவல் நிலையில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாதவன் மற்றும் அவரது சகோதரர் திருக்கண்ணன் கைது செய்யப்பட்டார்.

கொரோனா முன்னெச்சரிக்கை! ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசு!!

பின்னர் நடத்திய விசாரணையில் குட்டை நீரில் மூழ்கடித்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து எஞ்சிய வாசுகியின் உடல் பாகத்தை போலீசார் மீட்டெடுத்து பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில் மாதவனின் நண்பர் புன்னிய மூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து உள்ளார். தற்போது விசாரணைக்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.