Connect with us

அய்யய்யோ மாத்திரை என நினைத்து ஹெட்போனை விழுங்கிய பெண்… என்ன நடந்தது தெரியுமா?

1 1551158705

செய்திகள்

அய்யய்யோ மாத்திரை என நினைத்து ஹெட்போனை விழுங்கிய பெண்… என்ன நடந்தது தெரியுமா?

அய்யய்யோ மாத்திரை என நினைத்து ஹெட்போனை விழுங்கிய பெண்… என்ன நடந்தது தெரியுமா?

வலிநிவாரணம் மாத்திரை என நினைத்து ஒயர்லெஸ் ஹெட்போனை விழுங்கிய பெண்ணை பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில்  உள்ள மாசுசெப்ஸி பகுதியை சேர்ந்தவர் கார்லிப். அந்த பெண்மணி உடல்நலக்குறைவு காரணமாக கட்டிலில் படுத்து ஓய்வு எடுத்துள்ளார். ஒரு கையில் ஒயர்லெஸ் ஹெட்போனும் இன்னோறு கையில் வலிநிவாரணம் மாத்திரையும் வைத்துள்ளார்.

அப்போது அவருக்கு உடல்வலி ஏற்ப்படவே அதற்கான மாத்திரை என நினைத்து ஒயர்லெஸ் ஹெட்போனும் விழுங்கியுள்ளார்.

ஆனால் வலிகுறையாமல் போகவே சிறிது சந்தேகம் அடைந்துள்ளார். உடனே தனது கையில் இருந்த ஹெட்போனை காணவில்லை என நினைத்து தேட தொடங்கினார். தனது வலதுபுறமாக ஹெட்போன் இருப்பதாக காட்டியது. இதனால் மீயூசிக்கை ஒலிக்கசெய்துள்ளார்.

அந்த மீயூசிக் சத்தமானது தனது வயிற்றில் இருந்து கேட்க தொடங்கியது. அப்போதுதான் தன்னுடைய கவனக்குறைவால் மாத்திரைக்கு பதில் ஹெட்போனை விழுங்கி விட்டதை உணர்ந்து இருக்கிறார்.

அதை தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்து இருக்கிறார். அப்போது அவருடைய உடம்பு எக்ஸ் ரே எடுக்கப்பட்டது. அந்த எக்ஸ் ரே ரிப்போர்ட்டில் ஹெட்போன் வயிற்றில் இருந்ததை காண்பித்தது.

இந்த நிலையில் ஹெட்போன் எந்த உடல் உறுப்புக்கும் பாதிப்பி ஏற்படுத்தைல்லை என தெரிகிறது. அந்த ஹெட்போனை எப்படி வெளியில் எடுப்பது என தெரியாமல் தவித்த கார்லிப் அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டுமோ என அச்சப்பட்டு இருக்கிறார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த நாளே இயற்கையான முறையில் உடம்பை விட்டு வெளியே வந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற நாளில் அவர் தோழியின் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top