சென்னையில் பரபரப்பு.!! சினிமா பாணியில் கொக்கைன் கடத்திய பெண்.!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து போதை பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்க இலக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் வெனிசுலா நாட்டை சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவர் சென்னை வந்ததாக கூறப்படுகிறது. அவர் சுற்றுலாவிற்காக சென்னை வந்திருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் சுங்க இலக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

அப்போது அவரது உடமைகளில்  பரிசோதனை செய்தனர். அதில் 3 பாக்கெட்டுகள் கொக்கைன்கள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக ஒரு கிலோ 218 கிராம் கொக்கைன்  மதிப்பு 11 கோடியே 75 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவற்றை பறிமுதல் செய்த போலீசார் சர்வதேச போதை கும்பலுக்கு தொடர்பு உள்ளதா?இதன் பின்னணியில் யார் இருப்பது? போன்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment