உ.பி-யில் பயங்கரம்: லூடோ விளையாட்டில் தன்னையே பணயமாக வைத்த பெண்!

வளர்ந்து வரும் செல்போன் உலகத்திற்கு மத்தியில் ஆன்லைன் விளையாட்டுகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையில் ரம்மி, லூடோ உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுகின்றனர்.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் லூடோ விளையாட்டிற்கு அடிமையாகி தன்னையே பணயமாக வைத்து விளையாடிய சம்பவம் இணையவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000? – வெளியான நியூ அப்டேட்!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் வசித்து வரும் ரேணு என்ற பெண்மனி ஒருவர் லூடோ விளையாட்டிற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில் தன்னிடம் உள்ள அனைத்து பணத்தையும் வைத்து விளையாடியதில் மொத்தமாக பணத்தினை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் நிலக்கிழார் என்பவரிடன் தன்னையே பந்தயமாக வைத்து விளையாடியதாக தெரிகிறது. இதில் அவர் தோல்வியடைந்தால் அதிர்ச்சியடைந்த ரேணு தன்னுடைய கணவரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டிச.7,8 தேதிகளில் ஹை அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை!!!

தற்போது பெண்ணின் கணவர் பிரதாப் தன்னுடைய மனைவியை மீட்டுதர வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதோடு இத்தகைய விபரீத செயலை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.