தீபாவளி சீட்டு என்று ஏமாற்றிய பெண்! 22 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் தலைமறைவு!!

தீபாவளி என்றால் பல பகுதிகளில் சிறுசேமிப்பு திட்டம், பண்டு சீட்டு, பலகார சீட்டு என்று பல சேமிப்பு திட்டங்கள் காணப்படும். இவை பண்டிகை நாட்களில் பயனுள்ளதாக இருக்கும். ஒரு சில நேரங்களில் இதனை நடத்துபவர்கள் தலைமறைவாகுவது மிகுந்த சோகத்தை உருவாக்கும்.

அதன்படி தமிழகத்தில் 22 லட்சம் மோசடி செய்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளார். இவர் சென்னை திருவொற்றியூரில் மீனவ பெண்களிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆயிஷா என்ற பெண் தலைமறைவாகியுள்ளார்.

திருச்சினாங்குப்பம், காலடிப்பேட்டை, ஒண்டி குப்பத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. தீபாவளி பண்டு என 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சிறு சேமிப்பு திட்டமாக வசூல் செய்து வந்துள்ளார்.

பணம் கட்டுவதற்காக ஆயிஷா வீட்டுக்கு பெண்கள் சென்ற போது வீடு பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண்களிடம் 22 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆயிஷா ,அவரது சகோதரர் நாகூர் மோசடி செய்துள்ளனர்.ஆயிஷா,அவரது சகோதரர் நாகூர் மீது காவல் ஆணையத்தில் மீனவப் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment