சிறுத்தையை ஓடவிட்ட பெண்: நெட்டிசன்கள் பாராட்டு!

மும்பையில் வயதான பெண் ஒருவர் தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை தனது வாக்கிங் ஸ்டிக் கொண்டு அடித்து விரட்டிய சம்பவத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

மும்பையை சேர்ந்த வயதான பெண்ணொருவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு சிறுத்தை அவரை தாக்க முயன்றது. அப்போது அவர் தனது கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் சிறுத்தை தாக்கி தப்பித்தார். இதனையடுத்து அந்த சிறுத்தை தப்பி ஓடிவிட்டது

leopard6இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அந்த பெண்ணுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே மும்பையிலுள்ள கோரோகென் என்ற பகுதியில் அந்த சிறுத்தை நடமாட்டம் இருந்து வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு செல்ல முயற்சி செய்ததாகவும் அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் குழந்தையை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment