Connect with us

பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானம் விற்பனை? டாஸ்மாக் நிர்வாகத்தின் நிலைப்பாடு.!!

tasmac wines

தமிழகம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானம் விற்பனை? டாஸ்மாக் நிர்வாகத்தின் நிலைப்பாடு.!!

தமிழகத்தில் பல இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையானது தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மளிகை கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்கள், உணவகங்களில் பார்சல்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கும்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு வரும்.

அவ்வப்போது ஒரு சில கடைகள் இந்த ஆய்வில் பிடிபடும். இந்த நிலையில் ஹை கோர்ட் சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசிடம் பல்வேறு விதமான கேள்வியை எழுப்பி இருந்தது. அவற்றுள் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் பின்பு எப்படி பிளாஸ்டிக் தடை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இது தொடர்பாக தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிக அளவு வருமானம் தரும் தொழிலாக உள்ள மதுபான விற்பனையிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் கிடைத்தன.

ஆனால் அதற்கு டாஸ்மார்க் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்ற டாஸ்மார்க் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் ஹை கோர்ட்டில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top