தொழிலாளர்களின் நலன் மீது அக்கறை கொண்ட அமைச்சரின் மனைவி காலமானார்!

நேற்றைய தினம் முதலே தமிழகத்தில் பெரும் சோகம் நிலவுகிறது. ஏனென்றால் நேற்றையதினம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் 12 வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்.

அவர்களுக்கு இன்று காலை நீலகிரி வெலிங்டனில் அஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர். நம் தமிழக முதல்வர்  ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் இன்று காலை திமுக சுற்று வட்டாரத்தில் பெரும் சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ஏனென்றால் திமுகவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் மனைவி பவானிஅம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். பவானி அம்மாளுக்கு 55 வயதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் திட்டக்குடி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். அதிலும் குறிப்பாக தொழிலாளர்களின் கோரிக்கை மனுவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேரில் சென்று வாங்கி குறை தீர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொழிலாளர் மீது அக்கறை கொண்டுள்ள அமைச்சரின் மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment