புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்! தனியார் பேருந்துகள் கூட ஓடவில்லை!!
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக ஒவ்வொரு மாநிலத்திலும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன இருப்பினும் தனியார் பேருந்துகள் அதிக அளவு இயக்கப்பட்டு கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் தனியார் பேருந்துகளும் கூட ஓடவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியை புறக்கணிப்பதாக கூறிய மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் முழு அடைப்பு காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்பட வில்லை என்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அரசு பேருந்துகள் ஓரளவுக்குத்தான் இயக்கப்பட்டு உள்ள நிலையில் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வில்லை என்பது தற்போது புதுச்சேரி மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது.
