Connect with us

வலுவிழந்து விட்டது தாழ்வு மண்டலம்; நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை!!

புயல்

Tamil Nadu

வலுவிழந்து விட்டது தாழ்வு மண்டலம்; நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை!!

வலுவிழந்து விட்டது தாழ்வு மண்டலம்; நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் என்றும் அதன் பின்னர் மேலும் வலுவிழக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை நோக்கி நகர்வதால் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 7  முதல் 10-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top