நூறு அடியை எட்டிய மேட்டூர் அணை! அதிகளவு உபரி நீர் திறக்க வாய்ப்பு;

நடக்கின்ற இந்த ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக மாறி உள்ளது. ஏனென்றால் எப்போதும் மேட்டூர் அணையானது ஜூன் மாதத்திற்கு பின்பு தான் திறந்து விடப்படும். ஆனால் மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இது சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக திறந்து விடப்பட்டது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இவ்வாறு எட்டியுள்ளது. ஏனென்றால் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதன் காரணமாக கபினி, கேஆர்எஸ் போன்ற அணைகள் நீர் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி டெல்டா பாசனத்திற்காக 15,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் கூடுதலாக திறக்க வாய்ப்பு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment