Connect with us

மீண்டும் ஆரம்பிச்சிருச்சி எச்சரிக்கை! இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்;

fishers 2

செய்திகள்

மீண்டும் ஆரம்பிச்சிருச்சி எச்சரிக்கை! இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்;

அந்த வேகத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் கோடை காலமாக இருக்கின்ற இந்த சமயத்திலும் கூட தமிழகத்திற்கு மழை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படுகிறது.

இருந்தாலும் மீனவர்கள் தினம்தோறும் இன்னல்களை சந்தித்து கொண்டுதான் வருகின்றனர். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் மீன்பிடிக்க செல்வது கோடை காலத்தில் தான். ஆனால் கோடை காலத்தில் தமிழகத்தில் மழை பெய்வது மட்டுமில்லாமல் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக மீனவர்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு செல்ல எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, தெற்கு கேரளா, தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

தென் தமிழக கடலோர பகுதி, குமரிகடல் பகுதி, மத்திய கிழக்கு வங்க கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top