ஐ.நா. அவசர கூட்டத்தையே அழைக்க வைத்த போர்….! 40 ஆண்டுக்கு பின் முதன்முறையாக இன்று ஐ.நா. சிறப்புக்கூட்டம்!

உக்ரைனில் தற்போது கடுமையான போர் நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக ரஷ்ய ராணுவம் உக்ரைனில் உள்ள 4 முக்கிய நகரங்களை தங்கள் வசம் கைப்பற்றியதாகவும் ஊடகங்கள் வாயிலாக தகவல் அளித்துள்ளது.

ஆனால் தலைநகர் கீவ் பகுதியை ரஷ்ய ராணுவம் எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டது அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கீவ் பகுதியை மீண்டும் உக்ரேன் தன் வசமாக்க கைப்பற்றியுள்ளதாகவும் ஊடகங்கள் கூறியுள்ளன.

இந்த நிலையில் இன்று வரையும் போர் தணியவில்லை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது. இதனால் உலக நாடுகள் மூன்றாம் உலகப்போர் நிகழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதனை தடுப்பதற்காக ஒவ்வொரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட அறிவுறுத்தி வருகிறது.

இது குறித்து இன்று ஐநா சபையின் அவசர கூட்டம் கூடுகிறது. அதன்படி உக்ரேன் விவகாரம் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அவசரக் கூட்டம் இன்று கூடுகிறது.

193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை கூட்டத்தில் பங்கேற்க ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். 1950ஆம் ஆண்டுக்குப் பின் 11வது முறையாக ஐநா சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக உக்ரேன் விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா சபையின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment