கனமழையால் இடிந்து விழுந்த சுவர்! சுதாரித்த வீட்டு மக்கள் தப்பியோட்டம்!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் கன மழையின் விளைவாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுவிடுகிறது. அதோடு மட்டுமில்லாமல் மிகுந்த பொருள் சேதமும் ஏற்படுகிறது.மழை

குறிப்பாக கேரள மாநிலத்தில் கன மழையின் விளைவாக அங்கு பல மாவட்டங்கள் நீருக்குள் தத்தளிக்கிறது.அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் அருகே உள்ள மேல புலியூரில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. கந்தசாமி, பழனிச்சாமி ஆகியோரின் வீட்டு சுவர் இடிந்து விழுந்தபோது உள்ளே இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.இதனை அறிந்து உடனே அங்கு வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறையினர் பாதிக்கப்பட்ட இடத்துக்கு சென்று தக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் கனமழையின் எதிரொலியால் பச்சை மலையை சுற்றியுள்ள ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment