வெளிநடப்பு செய்தது இதற்காக மட்டும்தான் : டி.ஆர்.பாலு விளக்கம் !!
நீட் விலக்கு விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து எதிரொலித்து கொண்டுதான் இருக்கிறது. இதனை ரத்து செய்ய தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இரண்டாவது முறையாக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பபட்டது. ஆனால் இதனை குடியரசு தலைவருக்கு அனுப்பபடாமல் காலம் தாழ்துவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
அரசியல் சட்டத்தின் 200- வது விதிகளை தமிழக ஆளுநர் தொடர்ந்து மீறுவதின் காரணமாகவும் தமிழக கவர்னரை திரும்ப பெறக்கோரி மக்களவையில் இன்று காலையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரத்தினை கலந்துறையாடுவதற்காக உள்துறை அமைச்சர் அவைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். ஆனால் அவைதலைவரால் நிராகரிக்கப்பட்டது.
அதன் விளைவாகவாகதான் வெளிநடப்பு செய்ததாகவும் அதனை தொடர்ந்து மதியம் 12- மணி நேரத்தில் இந்த விவகாரத்தினை குறித்து மீண்டும் கேள்வியெழுப்பிய போதும் இதனை கண்டுகொள்ளாத காரணத்தினால் நாங்கள் வெளிநடப்பு செய்ததாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
