Connect with us

வாக்கு எண்ணிக்கையை வீடியோ எடுக்க வேண்டும்! எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவை அனுமதிக்கக்கூடாது!!

அண்ணாமலை

தமிழகம்

வாக்கு எண்ணிக்கையை வீடியோ எடுக்க வேண்டும்! எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவை அனுமதிக்கக்கூடாது!!

வாக்கு எண்ணிக்கையை வீடியோ எடுக்க வேண்டும்! எக்காரணம் கொண்டும் வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவை அனுமதிக்கக்கூடாது!!

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மட்டும்தான் கூட்டணியோடு தேர்தலை சந்தித்தது. இதில் பலரும் எதிர்பார்த்த கூட்டணியாக அதிமுக-பாஜக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இட ஒதுக்கீடு காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது. இருப்பினும் அதிமுகவை பற்றி பாஜக விமர்சனம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பாஜக தனித்து போட்டியிட்டது.

இதற்காக தினம்தோறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அவர் அப்போது ஆளும் கட்சியை விமர்சித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் நாளை தினம் நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை பற்றியும் அவர் கருத்து கூறியுள்ளார். அதன்படி வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்க என்று கேட்டு கொண்டுள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை தெளிவாக வீடியோ பதிவு எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆளும் கட்சியினரை வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இவர் கூறிய இத்தகைய கருத்து திமுக இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்த உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top