பாக்ஸ் ஆபீஸ்ல கலக்கி கொண்டு இருக்கும் விக்ரம் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்தாக தளபதி 67ல் களமிறங்க போகிறார் என எல்லோருக்குமே தெரியும். நம்ம தளபதியோட பிறந்தநாள் அன்று தளபதி 67 படத்தோட அபீசியல் வரப் போவதாக எதிபார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை.
இதன் படி லோகேஷ் தளபதி 67 ஆக்ஷன் படமாகவும் ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் விஜய் 40வது கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது இந்த அறிவிப்பு கடந்த விஜயின் பிறந்த நாளில் வெளியாகாத நிலையில் தற்போது இது குறித்து லோகேஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது ஒரு பேட்டியில் தனது வாரிசு படத்தை முடித்த பின்பு தளபதி படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். படம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்ட பின்பே படம் குறித்து வெளிப்படையாக பேச முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் லோகேஷியிடம் விஜய் படம் என்பதால் எந்த கேரக்டரை விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் விஜயின் கில்லி படத்தில் வரும் வேலு என தெரிவித்தார். கில்லி 2 படம் பற்றி ரசிகர்கள் விருப்பத்துடன் கேட்டு வரும் சூழலில் இந்த கேரக்டரை விரும்புவதாக லோகேஷ் தெரிவித்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்ரம் போல கில்லி படத்தை மீண்டும் முயற்சித்தால் மீண்டும் நாம் அனைவரும் விஜயை வேலுவாக பார்க்க முடியும். அதையடுத்து அந்த படத்தில் யாருமே எதிர் பார்க்காத மாதிரி விஜய்க்கு தனுஷ் வில்லனா நடிக்க போகிறார் எனவும் ஒரு பெரிய அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விஜய் 40வது கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுவதால் அதற்கு ஏற்ப வில்லனாக நடிக்கும் தனுஷிற்கு அவர் நடித்த புதுப்பேட்டை படத்தில் உள்ளது போல பெரிய கேரக்டரையும் இந்த படத்துல லோகேஷ் கொடுக்கப் போறார் என்று ஒரு பெரிய தகவல் வெளிவந்துள்ளது.
தி லெஜண்ட் சரவணன் படத்துடன் மோதும் பார்த்திபன் singal short படம்!
முன்னணி ஹீரோவாக இருந்து வில்லனாக மாறிய விஜய்சேதுபது ,விஜய் அவர்களின் கூட்டணியில் உருவாக்கிய மாஸ்டர் படத்தைப்போல இந்த படமும் வேற லெவல் மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.