Connect with us

அஜித் 61 படத்தின் வில்லன் யாரு தெரியுமா? மாஸ் அப்டேட்!

aji 3

பொழுதுபோக்கு

அஜித் 61 படத்தின் வில்லன் யாரு தெரியுமா? மாஸ் அப்டேட்!

நடிகர் அஜித் ஹெச் .வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையா உழைத்து வருவதாக கூறப்படுகிறது.

download 2022 07 28T210644.785

இந்த படம் செய்தித்தாள்களில் வரும் குற்றச் சம்பவங்களின் அடிப்படையில் கொண்டு உருவாக்கியதாகவும்,இதுவரை பல்வேறு இடங்களில் நடந்த வங்கி கொள்ளைச் சம்பவங்களின் அடிப்படையில் ரசிகர்களுக்கு சுவாரசியம் அளிக்கும் காட்சிகளை எச் வினோத் வடிவமைத்து வருவதாக கூறியுள்ளார்.

 

562b785b5f925b54b36a9d26dc057228

இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது . ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் நடைபெற உள்ளதாகவும், இந்தப் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது.படம் முழுவதும் நடிகர் வீரா,அஜித்துடன் தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

ajith 978787878787878787878787878787878787878789789

அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் அடுத்த கெட்டப்பில் புனேவின் சூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தனுஷின் நாளை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான வாத்தி டீசர்!

இந்நிலையில் இந்த படத்தின் மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது,ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது தான் அந்த தகவல். அதன்படி பிரபல பாலிவுட் நடிகரும், கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 31 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளார். அவர் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top