ஒரு படத்தின் வில்லன் என்றாலே முரட்டுத் தனமான உடலுடன், பார்ப்பதற்கே சற்று கொடூரமாக இருந்தால் தான் வில்லனை கண்டு ரசிகர்கள் பயப்படுவார்கள் என தமிழ் சினிமா எண்ணி கொண்டிருந்த சமயம் அது. ஆனால் அந்த சமயத்தில் இப்படி எல்லாம் எதுவுமே கிடையாது திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் வில்லனாக நடிக்கலாம் என கூறி வில்லனுக்கே புது தோற்றம் அளித்தவர் தான் நடிகர் ரகுவரன்.
ஆறடி உயரத்தில் ஒல்லியான தோற்றத்தில் பார்க்க அப்பாவி போல இருக்கும் நடிகர் ரகுவரனின் சிறப்பம்சே அவரது குரல் தான். தனது குரலை வைத்து மட்டுமே வில்ல தனத்தை அவ்வளவு அற்புதமாக செய்து மிரட்டியவர் தான் ரகுவரன். இவரெல்லாம் வில்லனா என கேலி செய்தவர்கள் மத்தியில் ஒரு சிறந்த நடிகனாக தன்னை நிலை நிறுத்தியவர் தான் நடிகர் ரகுவரன்.
இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன்கள் வந்து சென்றிருக்கிறார்கள். இப்போதும் புதிய வில்லன்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது வரை வில்லன் என்றாலே அது ரகுவரன் தான். அந்த பிராண்டை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. அந்த அளவிற்கு ரகுவரன் திறமையான நடிகர்.
இப்படிப்பட்ட திறமையான நடிகரான ரகுவரன் இதுவரை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இறுதிவரை உலக நாயகன் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட ரகுவரன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
அதில் முக்கியமான காரணம் என்றால் எங்கே ரகுவரனுடன் இணைந்து ஒரே படத்தில் நடித்தால் ரகுவரன் தனது திறமையான நடிப்பால் தன்னை ஓவர் டேக் செய்து விடுவாரோ என்ற பயத்தில் கமல் அவருடன் நடிப்பதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் ரகுவரனுக்கு அப்படியே எதிராக அவர் மனைவி ரோகிணி உள்ளார். அதன்படி நடிகை ரோகிணி உலக நாயகன் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது வரை ரஜினியுடன் இணைந்து ஒரு படம் கூட ரோகிணி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.