Connect with us

கோவில் எருதுக்கு நினைவு தினம் கொண்டாடிய கிராமம், நெகிழ்ச்சியான சம்பவம்..!

Jallikattu kaalai

தமிழகம்

கோவில் எருதுக்கு நினைவு தினம் கொண்டாடிய கிராமம், நெகிழ்ச்சியான சம்பவம்..!

மனிதன் இயற்கை எய்தினால் சில ஆண்டுகளில் மறந்து விடும் இந்த நூற்றாண்டில் நான்கு ஆண்டுக்கு முன்பு உயிரிழந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்று பால் அபிஷேகம் செய்து நினைவு நாள் அனுசரிப்பு – கிருஷ்ணகிரி அருகே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி – ராயக்கோட்டை சாலையில் பெத்த தாளாப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தின்னகழனி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக கோயில் காளை வழங்கி உள்ளனர். அந்த கோவில் காளையை கிராம மக்கள் தெய்வமாக வணங்கி வந்தனர். தைத்திருநாள் பொங்கல் பண்டிகை போது மஞ்சு விரட்டு எருது விடும் விழா போன்ற நிகழ்வுகளில் இந்த கோயில் காளை பங்கேற்று வந்தது.

கிராம மக்கள் சாமியாக வணங்கி வந்த இந்த கோவில் காளை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி உடல்நிலை குறைவால் உயிர் இழந்தது. இதனால் சோகம் அடைந்த கிராம மக்கள் சாமியாக வாழ வந்த கோவில் காளையை மாரியம்மன் கோவிலுக்கு எதிரே கிராமத்தின் மையப்பகுதியில் நல்லடக்கம் செய்தனர். அத்துடன் முக்கிய திருவிழா பண்டிகை காலங்களில் உயிரிழந்த காளைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். அதேபோல் ஆண்டுதோறும் கோவில் காளைக்கு உயிரிழந்த நாளில் கிராம மக்கள் அதனை நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர்.

அந்த வகையில் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. கிராம மக்கள் மேல தாளங்கள் முழங்க தேங்காய், பூ, பழம், வருகடலை, மஞ்சள், குங்குமம், வெல்லம், போன்ற பூஜை தட்டுகளுடன் அம்மன் தேர் முன்பே செல்ல ஏராளமான பெண்கள் ஊர்வலமாக கோவில் காளை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதிக்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள சமாதிக்கு மஞ்சள் குங்குமம் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர்.

அமைதி வேண்டியும்,நோய் நொடிகள் நீங்கவும், மழை வேண்டியும், கிராம மக்கள் வணங்கி சிறப்பு வழிபாடு செய்தனர். அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நினைவு நாளுக்கான ஏற்பாடுகளை தின்னகழனி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இன்றைய விஞ்ஞான அறிவியல் நூற்றாண்டில் மனிதர்கள் இயற்கை எய்தினால் ஒரு சில ஆண்டுகளில் மறந்து விடும் நிலையில் கோவில் காளைக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து நான்கு ஆண்டுகளாக நினைவு நாள் அனுசரிக்கப்படும் சம்பவம் கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top