27 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் வெற்றி! சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல்கல்!!: ஸ்டாலின்

இன்று காலை உச்ச நீதிமன்றம் மிகப்பெரிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி மருத்துவ படிப்பில் ஓபிசி 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டதாக உத்தரவிட்டிருந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் .அதன்படி 27 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் வெற்றி பெற்றது சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல்கல் என்று முதலில் கூறினார்.

திமுகவுக்கு, மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். பல ஆண்டுகளாக அரசியல் நீதிமன்றங்களும், திமுக நடத்திய போராட்டத்திற்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

தீர்ப்பின் மூலம் ஆண்டுதோறும் 4000 ஓபிசி மாணவர்கள் தங்களுடைய உரிமையை, பலனை பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார். கோடான கோடி பி.சி மக்களின் நலனுக்காக பாதிக்கும் என்ற இயக்கம் திமுக என்பதே மகிழ்ச்சியும் பெருமையும் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை அளித்துள்ளார்.

மண்டல குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்கு தமிழ்நாடு ஆற்றிய பங்களிப்பு வெற்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சியால் பிசி பிரிவுக்கு இழைக்கப்பட்ட வந்த நீதி  துடைத்தெறிய பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

எம்.பி.பி.எஸ் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப்புள்ளி தேவை என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். எல்லா மாநிலமும் 100 சதவீத இடங்களையும் நிரப்பிக் கொள்ளும் நடைமுறை வரவேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

உயர் ஜாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு எதிரான வழக்கில் திமுக விரிவான வாதங்களை வைக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment