Connect with us

கத்திப்பாரா ஆக்சிடெண்டில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

kathipara accident

தமிழகம்

கத்திப்பாரா ஆக்சிடெண்டில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தினம் தோறும் தமிழகத்தில் விபத்து என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் தினமும் விபத்து நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்றைய தினம் கூட சென்னையில் உள்ள கிண்டியில் பெரும் விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் காயம் அடைந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை கத்திப்பாராவில் பஸ் மோதி வழிகாட்டி பலகை விழுந்ததில் காயமடைந்த தனியார் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோமா நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அரசு பஸ் மோதி விளம்பர பலகை விழுந்ததில் பைக்கில் சென்று கொண்டிருந்த சண்முகசுந்தரம் காயமடைந்தார்.

உயிரிழந்த சண்முகசுந்தரம் சென்னையில் உள்ள தனியார் ஐஸ் நிறுவனத்தில் டெலிவரிபாயாக பணியாற்றி வந்தவர். இதனால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top