வேதா நிலையம், ஃபீனிக்ஸ் நினைவிடம் என 2 எதற்கு? கொடுத்த காசை வாங்கிவிடுங்கள் ஹைகோர்ட்!

தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தகவல் எதுவென்றால் ஜெயலலிதா வேதா  இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான்.

வேதா நிலையம்

இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சில கருத்துக்களை கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் வேதா நிலையம், ஃபீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு எதற்கு? என்று கேள்வி கேட்டுள்ளது.

அதன்படி வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள ஃபீனிக்ஸ் நினைவிடம் என இரண்டு நினைவிடங்கள் எதற்கு? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது.

கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமான வரி நிலுவை போக மீதி தொகையை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.வரி பாக்கியை வசூலிபதற்கான நடவடிக்கையை வருமானவரித்துறை மேற்கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றத்தில் செலுத்திய ரூபாய் 67.95 கோடி இழப்பீடு தொகையை அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னை  ஹை கோர்ட் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment