Connect with us

இந்திய ரூபாயின் மதிப்பு: வரலாறு காணாத சரிவு!

rupeevsdollar 1617114722

News

இந்திய ரூபாயின் மதிப்பு: வரலாறு காணாத சரிவு!

பங்கு வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை தொடங்கியதுமே மும்பை பங்குச்சந்தை 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நேரத்தில் இருந்தே பங்குகளின் விலை வீழத்தொடங்கியது. இந்நிலையில் மள மளவென குறைந்த பங்குகளின் மதிப்பு 1,427 புள்ளிகள் குறைந்து 52,875 ஆக பதிவானது.

அதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி, 373 புள்ளிகள் சரிந்து 15,828 ஆக பதிவானது. இன்று குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் ஐ.டி நிறுவனங்களின் பங்குகள் குறைந்தன. ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்னர் தொடங்கி இந்திய பங்குச்சந்தையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்காவின் மத்திய வங்கி மேலும் நெருக்கடிக்கு ஆளாகலாம் என்பதால் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகம் ஆகலாம் என்பதால் முதலீடு குறைந்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது 78.24  காசுகளாக குறைந்துள்ளதால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்காவின் பணவீக்க விகிதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதால் ரூபாயின் மதிப்பு மேலும் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top