நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி ஒன்னும் காரணமில்ல!!

தனது  நடிப்பாலும் தனது திறமையாலும் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை தமிழ் சினிமாவில் பெற்றவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.விவேக்

அவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் அவர் சில மாதங்களுக்கு முன்பாக மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு உண்டானது என்று பல சர்ச்சையான கருத்துகள் உருவாகியது. இந்தநிலையில் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் விவேக் இறப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழு தகவல் அளித்துள்ளது. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார்.

நடிகர் விவேக்கின் மரணம் தற்செயலானது தவிர கொரோனா தடுப்பூசி தொடர்பில்லை என்று தடுப்பூசி பாதிப்பு தொடர்பான ஆய்வு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தேசிய குழு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment