
Tamil Nadu
இன்று முதல் இதற்கு தடை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு !!
சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்துலாக அமைவது பிளாஸ்டிக். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் தற்போது பணக்கார கோவில்களாக இருக்கும் திருப்பதியிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த இன்று முதல் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வதற்கு வருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் அதிகமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.
இதனை கருத்தில் கொண்டு மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள் போன்றவைகளை கோவிலுக்கு எடுத்துச்செல்ல தேவஸ்தானம் தடை விதித்தது
இதனிடையே இதற்கு சோதனை நடத்தும் விதமாக திருப்பதி அடிவாரமான அலிபிரி சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு அங்கு பரிசோதித்தப்பிறகே பக்தர்களை அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வகை அறிவிப்பினால் திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
