Connect with us

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் : UGC அதிர்ச்சி ரிப்போர்ட்!!

UGC

செய்திகள்

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் : UGC அதிர்ச்சி ரிப்போர்ட்!!

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக பல்கலைகழக மானிய குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி தெரிவித்துள்ளது. சட்டப்படி நிறுவப்படாத குறிப்பிட்ட 21 பல்கலைக்கழகங்களும் பட்டம் வழங்க தகுதி இல்லாதவை என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

அதே போல் சட்டப்படி அமைக்கப்படாத எந்த நிறுவனமும் பல்கலைக்கழகம் என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது என்றும் டெல்லியில் உள்ள 8 கல்வி நிறுவனங்களுக்கும் கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கல்விநிறுவனம் போலியாக செய்பட்டு வருதாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து உ.பி-யில் நான்கு பல்கலைக்கழகங்களும் ஒடிசா, மேற்கு வங்காளத்தில் இரண்டு பல்கலைகழகம் போலியானதாக யுஜிசி தெரிவித்துள்ளது.  புதுச்சேரியில் இயங்கிவரும் ஸ்ரீ போதி அகாடமி ஆஃப் ஹையர் எடுகேஷன் என்று கல்வி நிறுவனமும் போலியானது என கூறியுள்ளது.

மேலும், தமிழகத்தில் போலி பல்கலைக்கழகங்கள்  இல்லை என்றும் பல்கலைகழக மானிய குழு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top