ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு உதவி செய்யும் அமெரிக்கா! கமலா ஹாரிஸ் அறிவிப்பு;

ஒவ்வொரு நாடும் தற்போது உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. ஏனென்றால் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை ஒவ்வொரு நாடுகளும் அளித்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா உக்ரைனுக்கு உதவுவதாக கூறி உள்ளது .முதலில் சுமார் 600 மில்லியன் டாலர் அளவிலான பொருளாதார நிதி உதவியை அமெரிக்கா அளித்திருந்தது. இந்த நிலையில் மற்றொரு நிதியுதவியும் அமெரிக்கா வழங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை முறியடிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா போர் தளவாடங்களை வழங்கிவருகிறது. மனிதநேய உதவிகள், போர்க்கருவிகள் வழங்க ரூ 1.06 லட்சம் கோடி நிதி ஒதுக்கி அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் 381 கோடி ரூபாய் மனிதநேய உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறபடுகிறது. உக்ரைனுக்கான நிதியுதவி குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இத்தகைய தகவலை வெளியிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment